BHBC

Overview of Basic HBC

Organization: HINDUCHARACTER BUILDING CENTRE, MALAYSIA

Official Name: PERTUBUHAN PEMBANGUNAN DAN PERKEMBANGAN SAHSIAH HINDU MALAYSIA {PPM-021-01-04072018}

Slogan: "அறம்தனை அகம் பதிப்போம்/aRam thanai agam pathippOm " (Let’s internalize virtue)

The mission: To instill the profound teachings of ethics contained in the three revered Thamizh texts - Aththi chUdi, KonRai vEnthan and ThirukkuRaL - through a thoughtfully designed curriculum, guiding the younger generation of Hindus in moral and spiritual development.

Key Principles

  • அறம் (aRam): Virtue (is the categorization of intentions, decisions and actions into those that are proper or right and those that are improper or wrong).
  • அகம் (agam): Heart & Mind ~ Inner development and emotional well-being.

Program Goals

  • To instill ethical behavior and moral values in students.
  • To foster a strong sense of community and self-respect.
  • To prevent social degradation by promoting cultural and religious education.

Curriculum Highlights

Part 1 – Memorize aloud, retain and recite utilizing the acrostics & mnemonic techniques:
  • Twenty four (24) prayer songs (inclusive of GAyathri manthirangkaL & sulOgangkaL).
  • 109 verses of “Aththi chUdi” an inimitable work of the great Thamizh saint poetess “avvaiyAr”.
  • 91 verses of KonRai vEnthan also from “avvaiyAr”.
  • Selected 32 KuRal from the great Thamizh work of ThirukkuRaL consisting of 1330 couplets (KuRal) on ethics & cosmic order, society, politics, economics & statecraft by the celebrated Thamizh saint poet ThiruvaLLuvar.
Part 2 – Understanding and Application:
  • Mastery of memorized contents.
  • Practical application of learned values in daily life.

Program Duration

  • The program typically spans five (5) years and may extend more depending on an individual student’s pace.

Teaching Approach

  • Classes are inclusive, avoiding competitive rankings to ensure equal participation and encouragement.
  • Teachers focus on holistic development rather than academic achievements alone.

Community Involvement

  • The program encourages participation from all sections of the Hindu community, promoting unity and cultural integrity.
  • Aims to prevent future generations from facing current social challenges by fostering a strong moral foundation.

Encouragement for Participation

  • Hindu community members are urged to take active roles in promoting and participating in the HBC program within their localities.

Conclusion

  • The program emphasizes the importance of integrating moral education into the lives of students to build a stronger, more ethical community.
  • The ultimate goal is to "engrave morality into our hearts & minds" and ensure the well-being of the Hindu community through education and cultural awareness.

The document is signed by R. Subramaniam, the founder and president of the Hindu Character Building Centre Malaysia, emphasizing the significance and need for the HBC program in the current social context.

இயக்கம்: மலேசிய இந்து அறநெறிக்கல்வி மையம்

முழக்கம்: “அறம்தனை அகம் பதிப்போம்”

குறிக்கோள்: தமிழ் நீதி நூல்களாகிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் மற்றும் திருக்குறள் ஆகியவை வழியுறுத்தும் நல்லொழுக்க நெறிமுறைகளைக் கொண்டு, சமகால வாழ்வியலுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம், இளைய தலைமுறையினரின் தார்மீக மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு வழிகோலுதல்.

வழிகாட்டும் முதன்மைக் கருத்துக்கள்

அறம்: ஒருவரது எண்ணம் சொல் செயல் ஆகியவற்றில் கொள்ளத்தக்கவை (சரியானவை) தள்ளத்தக்கவை (தவறானவை) என்று வகைப்படுத்திக் கொள்ளும் வாழ்வியல் நெறிமுறை.

அகம்: மனம் / எண்ணம் (தெளிந்த உள்ளார்ந்த ஆன்ம வளர்ச்சி)

வழிகாட்டும் பொதுமறை: கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (குறள் 130 அதிகாரம் 13 / அடக்கமுடைமை) {சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவராக இருக்க வல்லவருடைய செவ்வியை அவருடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.}

Virtue waits a timely entry on the path of one who curbs wrath and learns self- restraint.

திட்டத்தின் இலக்கு

  • மாணவரிடம் நல்லொழுக்கப் பண்புகளையும் தார்மீக விழுமியங்களையும் வளர்த்தெடுப்பது. மாணவரிடம் சுயமரியாதையோடு கூடிய தெளிந்த சமூகப் பார்வையை ஊக்குவிப்பது. கலாச்சாரம் மற்றும் சமயச் சிந்தனையை உள்ளடக்கிய அறநெறிக்கல்வியை உக்குவிப்பதன் வழி சமூகச் சீரழிவைத் தடுப்பது.

பாடத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்

பகுதி 1 – உரக்க மனனம் செய்யவும், மனப்பாடம் செய்தவற்றைத் தக்கவைத்துக் கொள்ளவும், அக்ரோஸ்டிக் & நினைவூட்டல் நுட்பத்தைப் பயன்படுத்தி மனனம் செய்தவற்றை ஒப்புவிக்கவும் கற்றுக்கொள்வது
  • காயத்ரி மந்திரம் மற்றும் சமஸ்கிருத சுலோகங்கள் உள்ளிட்ட 24 பிரார்த்தனைப் பாடல்கள்.
  • ஔவை பெருமாட்டியின் 109 ஆத்திசூடி செய்யுள்கள்.
  • ஔவை அன்னையின் 91 கொன்றை வேந்தன் செய்யுள்கள்.
  • உலகப் பொதுமறையாம் திருக்குறளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 32 குறட்பாக்கள்.
பகுதி 2 – புரிதல் மற்றும் பயன்பாடு
  • மனனம் செய்தவற்றின் உள்ளடக்கப் பொருளை விளங்கிக் கொள்வது.
  • கற்று விளங்கிக் கொண்ட அறம் சார்ந்த வாழ்வியல் நெறிமுறைப் பண்புகளை தினசரி வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துவது.

திட்டத்தின் கால அளவு

  • பொதுவாக ஐந்து ஆண்டுகள். தனிப்பட்ட மாணவரின் கற்றல் திறனுக்கேற்ப நீட்டிக்கப்படலாம்.

கற்பித்தல் அணுகுமுறை

  • போதனாசிரியர்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட பின்பே வகுப்புகளில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க அனுமதிக்கப் படுகின்றனர்.
  • அனைத்து மாணவர்களும் சமமாக முன்னேறுவதை உறுதி செய்யவும் “என்னால் முடியும்” என்ற நேர்மறை என்னப்பாட்டை ஒவ்வொரு மாணவரின் உள்ளத்திலும் ஆழமாகப் பதிய வைக்கவும் நமது பயிற்சித் திட்டத்தில் போட்டி தரவரிசை முறை முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு மாணவரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதை உறுதி செய்வதோடு அறம் சார்ந்த வாழ்வியல் நெறியின் விழுமியங்களைத் தமது அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துவதையும் உறுதி செய்கிறது.

சமூக ஈடுபாடு

  • இத்திட்டம் இந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பங்கேற்பதை ஊக்குவிப்பதோடு ஒற்றுமை மற்றும் கலாச்சார ஒருமைப்பாட்டையும் ஊக்குவிக்கிறது.
  • இத்திட்டம் வலுவான தார்மீக அடிப்படையை உறுதி செய்வதன் மூலம் தற்போது நாம் எதிர்நோக்கும் எதிர்மறைச் சமூக சவால்களை நமது வருங்கால சந்ததியினர் எதிர் கொள்ளாமல் காக்க உதவுகிறது.

சமூக பங்கேற்பு

  • பங்கேற்பு என்பது சமூக மக்களின் செயற்திறமான ஈடுபாடகும்.
  • இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் தம் வட்டாரங்களில் அறநெறிக்கல்வித் திட்டத்தைச் (HBC program) செயல்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும். இப்பாடத்திட்டத்தின் கூறுகளில் சமூகத்துடன் பல்வேறு நிலைகளில் பங்கேற்பு இருப்பதையும், பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்த முடியும் என்பதையும் காணலாம்.
  • இந்து சமூகத்தின் உறுப்பினர் ஒவ்வொருவரும் இதைத் தமது சமுதாயக் கடமையாக ஏற்றுச் செயல்படக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

முடிவு

  • மாணவர்களின் வாழ்க்கையில் அறநெறிக்கல்வியை ஒருங்கிணைப்பதன் வழி எதிர்காலத்தில் அறம் சார்ந்த வாழ்வியல் நெறியின் விழுமியங்களைப் போற்றி தம் வாழ்க்கையில் தினசரி கடைப்பிடிக்கும் ஒரு வலுவான இந்து சமூகத்தை உருவாக்க முடியும்.
  • நமது எண்ணம் சொல் செயல் ஆகியவை அறம் சார்ந்தவையாக மட்டுமே இருப்பதை விழிப்புணர்வோடு உறுதி செய்து கொள்வதே இறுதி இலக்காதல் வேண்டும்.

இந்த ஆவணம் மலேசிய இந்து அறநெறிக்கல்வி மையத்தின் நிறுவனர் தலைவர் கங்கை மைந்தன் இராமையா சுப்பிரமணியம் அவர்களால் நிகழ்காலச் சமூகச்சூழலில் அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தை வழியுறுத்திக் கையெழுத்திடப்பட்டுள்ளது.

JAWATAN KUASA TAHUN 2023-2024

Penasihat: VEthAgama NyAnabAskara Sivasri A.P. Muthukumara SivAchchAriyAr avargaL (வேதாகம ஞானபாஸ்கர சிவஶ்ரீ அ.ப. முத்துக்குமார சிவாச்சாரியார் அவர்கள்)
EN. NALLIAH @ SINNIAH A/L LETCHUMANAN 016-3411982
EN. KANNIAPPAN A/L THIRUVENKDAM 013-7767358
EN. KALIANASUNDARAM A/L SHANMUGAM 019-2780250
EN. SATCHITHANANDAM A/L TACHINA MOORTHI 016-4327144
Pengerusi: EN. SUBRAMANIAM A/L RAMAIYA 019-6664355
Naib Pengerusi: EN. GOVALKRISHNAN A/L PERUMAL 016-3221652
Setiausaha Kehormat: PN. S. TELAGAVATHI A/P M. SENGODAN 016-7682974
Penolong Setiausaha: EN. VASUTHEVAN A/L ANNAMALAI 012-7135958
Bendahari: PN. SARALA A/P RETNAM 012-7729502
Ahli Jawatan Kuasa
PN. JOTHIMANI A/P SAMIPILLAY 016-4445478
PN. RAMADEVI A/P RATNAM 016-7932035
PN. AHILADEVI A/P KUALATHUNKA 012-4242205
CIK. KOMATHY A/P MURUGIAH 012-5322974
EN. MARUTHAMUTHU SANKAR A/L ANGAPPAN 012-5711377
Juru Audit
EN. A RAVINDRAN A/L ARUCHUNAN 013-7708392
EN. HARI KAARTHI A/L MOHANAN 016-7354044
S.Telagavathi,
Hon. National Secretary