BHBC

The Necessity for the HBC Program

The HBC program was conceived to address several long-standing challenges faced by the community in Malaysia:

1. A rising incidence of anti-social behaviour associated with the community.

2. A decline in moral values, communal respect and self-dignity within the community.

3. Internal conflicts that remain unresolved, fostering further discord.

4. Unregulated and unsanctioned establishment of temples, leading to significant economic strain on the community.

5. The presence of divisive factions formed in the name of religion, perpetuating conflicts.

6. The detrimental influence of Thamizh cinema and TV serials on community values.

7. Family discord arising from religious conversions, causing confusion and division.

Objectives of the HBC Training Program:

1. Eradicate negative influences, beginning with a focus on youth.

2. Foster self-respect and dignity among young people.

3. Cultivate a generation that values education, economic independence, and moral integrity.

4. Nurture future leaders who understand the interdependence of national, communal, and personal well-being.

5. Develop a group of youth who reject negativity and actively contribute to the progress of their community.

Action Plan:

  • Program Duration: Typically structured over a 5-year period.
  • Curriculum: A comprehensive syllabus tailored to the age group of participants.
  • Training Methods: A blend of online and in-person sessions.
  • Participants: Primarily Malaysian students, with opportunities for international students from Singapore, India, Sri Lanka, Australia, and other countries who can align with Malaysia's time zone for virtual lessons.
  • Monitoring: Regular oversight of participants' academic progress, coupled with parental counselling as needed.
  • Focus: Hindu students, especially from socially disadvantaged backgrounds.
  • Financial Support: Contributions from individuals, families, and the general public.

Conceptualized and promoted by Founder President Subramaniam Ramaiya since September 2001.

மலேசியாவில் இந்திய/இந்து சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால சவால்களை சமாளிக்க HBC திட்டம் மிக முக்கியமானதாகும். இந்தத் திட்டத்தின் தேவையும், அதன் உருவாக்கத்தின் அவசியத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

1. அதிகரித்து வரும் சமூகத்துடன் தொடர்புடைய சமூக விரோத நடத்தைகள்.

2. சமூகத்தில் தனிமனித ஒழுக்க விழுமியங்கள், சமூக மரியாதை மற்றும் தனிமனித சுயமரியாதை ஆகியவற்றில் சரிவு.

3. முரண்பாடுகளை மேலும் வளர்க்கும் தீர்க்கப்படாமல் இருக்கும் சமூகக் கட்டமைப்பில் காணப்படும் உட்பூசல்கள்.

4. சமூகத்தின் மீது குறிப்பிடத்தக்க பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும் ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் அனுமதியின்றி நிறுவப்படும் கோவில்கள்.

5. சமூகத்தில் மதத்தின் பெயரால் உருவாக்கப்படும் பிளவுகள், அவற்றால் எழும் மோதல்கள் மிகவும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

6. சமூக விழுமியங்களில் தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் கேடு விளைவிக்கும் செல்வாக்கு.

7. குழப்பத்தையும் பிரிவையும் ஏற்படுத்தும் மத மாற்றங்களால் எழும் குடும்ப முரண்பாடுகள்.

HBC பயிற்சி திட்டத்தின் நோக்கங்கள்

1. இளைஞர்களை மையமாகக் கொண்டு, எதிர்மறை தாக்கங்களை ஒழிப்பது.

2. இளைஞர்களிடையே சுயமரியாதை மற்றும் கண்ணியத்தை வளர்ப்பது.

3. கல்வி, பொருளாதார சுதந்திரம் மற்றும் தார்மீக ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிக்கும் ஒரு தலைமுறையை வளர்ப்பது.

4. தேசிய, சமூக மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு ஒன்றோடொன்று சார்ந்திருப்பதைப் புரிந்துகொள்ளும் எதிர்காலத் தலைவர்களை வளர்த்தெடுப்பது.

5. எதிர்மறை சிந்தனைகளை நிராகரித்து தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தீவிரமாகப் பங்களிக்கும் இளைஞர்கள் கொண்ட குழுவை உருவாக்குதல்.

செயல் திட்டம்

  • திட்ட கால அளவு: பொதுவாக 5 வருட காலத்திற்குள் கட்டமைக்கப்படுகிறது. (மாணவரின் கற்றல் திறனைப் பொருத்து கால அளவு மாறலாம்)
  • பாடத்திட்டம்: மாணவர்களின் வயதிற்கு ஏற்றவாறு ஒரு விரிவான பாடத்திட்டம்.
  • பயிற்சி முறைகள்: இயங்கலை (ஆன்லைன்) மற்றும் நேரில் நடக்கும் அமர்வுகளின் கலவை.
  • பங்கேற்பாளர்கள்: மலேசிய மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இயங்கலை (ஆன்லைன்) வகுப்புகளில் மலேசிய நேர மண்டலத்துடன் இணையக்கூடிய சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மாணவர்களுக்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
  • கண்காணிப்பு: மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான வழக்கமான மேற்பார்வை மற்றும் தேவைக்கேற்ப பெற்றோருக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
  • நிதி ஆதரவு: தனிநபர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களின் நன்கொடை.

இந்த திட்டம் மலேசிய இந்து அறநெறிக்கல்வி மையத்தின் நிறுவனர் தலைவர் ஐயா இராமையா சுப்பிரமணியம்@கங்கை மைந்தன் அவர்களால் 2001 இல் கருத்துருவாக்கம் கண்டு தொடர்ந்து நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.