BASIC HINDUCHARACTER BUILDING COURSE (BHBC)
Mode:
- Virtual & In-person lessons (at centres)
Program Structure:
Duration:
- 5 years (may be extended depending on the individual student's pace)
Intake Age:
- Hindu children aged 6-13 years. (Children above 13 years may register to attend at their own discretion)
Syllabus:
The program includes four (4) segments of 3 Levels covering: -
(A) Levels - 1 & 2 – primarily memorization
- (aa) Segment-1 / Twenty four (24) “pirArththanai pAdalkaL” (prayer songs inclusive of GAyathri manthirangkaL and selected sulOgangkaL)
- (bb) Segment-2 / 109 verses (seiyuL) of “Aththi chUdi”
- (cc) Segment-3 / 91 verses of “Konrai vEnthan"
- (dd) Segment-4 / 32 selected couplets from the famous “ThiruvaLLuvar’s” 1,330 “ThirukkuRaL” text.
(B) Level 3 – Meanings explained
- PowerPoint presentations are used to explain the meanings of all 24 prayer songs, 51 selected verses from “Aththi chUdi,” 40 verses from “Konrai vEnthan,” and 32 “ThirukkuRaL.”
Language of Instruction:
- Special Note: Since Levels 1 and 2 focus primarily on memorization, language is not a barrier. Non-Thamizh speaking children are strongly encouraged to enrol as this presents an excellent opportunity for them to learn Thamizh language. Explanations in Level 3 are provided in both Thamizh and English. Slides are presented in all three languages, Thamizh, English & Bahasa Malaysia.
Tutorial Team:
- Level 1: Managed by a well-trained team of senior and junior tutors, coordinated by the National Secretary, Amma Telagavathi Sengodan. The weekly training protocol is set and overseen by the Founder President, ayyA Subramaniam Ramaiya.
- Level 2: Led by senior tutors, coordinated by the Assessment Team Director, ayyA Vasuthevan Annamalai, who is also a senior tutor. The weekly protocol is set and supervised by the Founder President, ayyA Subramaniam Ramaiya.
- Level 3: Founder President ayyA Subramaniam Ramaiya, the principal trainer, prepares detailed PowerPoint slides and training protocols for all Level 3 lessons and conducts the lessons himself.
Assessment:
- Year-end assessments will determine whether Level 1 students advance to the next level or require additional training. Similarly, Level 2 students will be assessed after 4-6 months to decide if they qualify for Level 3, remain at Level 2, or return to Level 1 for further training.
Additional Note:
- Over time, the training program aims to enhance students' cognitive development using acrostic and mnemonic techniques. The memorization process significantly improves students’ mastery of the Thamizh language and its unique pronunciation patterns.
INTERMEDIATE HINDU CHARACTER BUILDING COURSE (IHBC)
Mode:
- Annual, quarterly, or monthly camps / In-person training
Program Structure:
- The curriculum covers 48 topics focusing on the basic tenets of Hinduism, as well as ethics and morals for daily life. Yoga and traditional Indian games are also included.
Duration:
- Format 1: Four (4) years / One annual camp (3 days, 2 nights) covering 12 topics per camp
- Format 2: Two (2) years / Quarterly / One-day lessons covering 6 topics per session
- Format 3: One (1) year / Monthly / One-day lessons covering 4 topics per session
Training Materials:
- Lessons are presented using well-prepared materials, with PowerPoint slides as an additional resource.
Remarks:
- This program is currently on hold due to a lack of funding.
BHBC TUTOR TRAINING
Mode:
- Through Real-Time Virtual classes: New recruits undergo real-time training through virtual classrooms, under the supervision of the National Secretary, Amma Telagavathi Sengodan, and the Founder President, ayyA Subramaniam Ramaiya. After about a year of intense training, recruits may be appointed as administrative tutors, managing their own virtual or in-person classes.
- Through Bi-Annual In-person Training: Zonal training (North, Central, & South) is conducted with Founder President ayyA Subramaniam Ramaiya as the principal trainer, assisted by National Secretary Amma Telagavathi Sengodan.
- Annual Rest & Recreation Retreat: A 3-day, 2-night retreat for all tutors at selected seaside resorts. The organization covers 50% of the cost.
Remarks:
- The in-person zonal trainings are currently on hold due to a lack of funding.
(A) அடிப்படை இந்து இந்து அறநெறிக்கல்வித் திட்டம் (BHBC)
பயிற்றுத்தளம்:
- இயங்கலை (மெய்நிகர்) வகுப்புகள் & பள்ளிகள், கோவில்கள் மற்றும் சமூக மையங்களில் நேரில் நடத்தப்படும் வகுப்புகள்.
பயிற்சி அமைப்பு:
காலம்:
- 5 ஆண்டுகள் (தனிப்பட்ட மாணவர்களின் கற்றல் திறனைப் பொறுத்து நீட்டிக்கப்படலாம்)
வயதுக் கட்டுப்பாடு:
- 6-13 வயதுக்குட்பட்ட இந்து குழந்தைகள். (13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அவரவர் ஆர்வத்திற்கேற்ப கலந்துகொள்ள பதிவு செய்யலாம்)
பாடத்திட்டம்:
நான்கு பிரிவுகள் கொண்ட மூன்று படிநிலைப் பயிற்சித் திட்டம்:-
(க) படிநிலைகள் - 1 & 2: முற்றிலுமாக மனனப் பயிற்சி மட்டுமே முதன்மைப்படுத்தப் படுகின்றது
- (க.க) பிரிவு-1: காயத்ரி மந்திரங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுலோகங்கள் உட்பட இருபத்தி நான்கு (24) பிரார்த்தனைப் பாடல்கள்
- (க.உ) பிரிவு-2: அத்தி சூடி / முழுமையாக 109 செய்யுள்கள்
- (க.ந) பிரிவு-3: கொன்றை வேந்தன் / முழுமையாக 91 செய்யுள்கள்
- (க.சு) பிரிவு-4: உலகப் பொதுமறையாம் திருக்குறளிலிருந்து பயிற்சி பெரும் மாணவர்களுக்குப் பொருத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 32 குறட்பாக்கள்
(உ) படிநிலை-3: சொற்பொருள் விளக்கம் மற்றும் கருத்துரை வழங்கப்படும்
- “பவர்பாயிண்ட்” (PowerPoint) விளக்கக்காட்சிகளுடன் அனைத்து (24) பிரார்த்தனைப் பாடல்கள், ஆத்திசூடியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 51 செய்யுள்கள், கொன்றை வேந்தனிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 செய்யுள்கள் மற்றும் பாடத்திட்டத்தில் காணப்படும் 32 திருக்குறள்களுக்கும் சொற்பொருள் விளக்கம் மற்றும் கருத்துரை வழங்கப்படும். (சற்றேறக்குறைய மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்படும்)
(ந) பயிற்று மொழி:
- தமிழ் மற்றும் ஆங்கிலம் (கூடுதலாக ”பவர்பாயிண்ட் ” விளக்கம் தேசிய மொழியிலும் இணைக்கப்பட்டுள்ளது)
- சிறப்பு குறிப்பு: படிநிலைகள் 1 மற்றும் 2 இல் மனனப்பாடம் முதன்மையாக கவனம் பெறுவதால், மொழி ஒரு தடையாக இருக்காது. தமிழ் மொழியைக் கற்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். தேசிய மொழிப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும் இல்லங்களில் இயல்பாகத் தமிழ் மொழியில் பேசிப் பழகாத குழந்தைகளும் இந்தப் பயிற்சியில் பதிவு செய்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். படிநிலை 3 இல் சொல்லப்படும் விளக்கங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றது. “பவர்பாயிண்ட்” விளக்க “ஸ்லைடுகளும்” தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமல்லாது கூடுதலாக தேசிய மொழியிலும் தயார் செய்யப்பட்டுள்ளது.
(சு) பயிற்சிக் குழு:
- படிநிலை 1: தேசிய செயலாளர் அம்மா திலகவதி செங்கோடன் அவர்களால் ஒருங்கிணைக்கப்படுகிறது. சிறந்த முறையில் பயிற்சி பெற்ற மூத்த மற்றும் பயிற்சி பெற்றுவரும் இளைய போதனாசிரியர்களின் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. வாராந்திர பயிற்சி நெறிமுறை நிறுவனர் தலைவர் ஐயா இராமைய சுப்பிரமணியம் அவர்களால் வகுக்கப்பட்டு மேற்பார்வையிடப்படுகிறது.
- படிநிலை 2: மதிப்பீட்டுக் குழு இயக்குநரும் மூத்த போதனாசிரியருமாகிய ஐயா வாசுதேவன் அண்ணாமலை அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நன்கு பயிற்சி பெற்ற மூத்த போதனாசிரியர்களின் தலைமையில் நடைபெறுகிறது.. வாராந்திர பயிற்சி நெறிமுறை நிறுவனர் தலைவர் ஐயா இராமையா சுப்பிரமணியம் அவர்களால் வகுக்கப்பட்டு மேற்பார்வையிடப்படுகிறது.
- படிநிலை 3: நிறுவனர் தலைவர் ஐயா இராமைய சுப்ரமணியம்அவர்கள், முதன்மை பயிற்சியாளராக அனைத்து படிநிலை 3 பாடங்களுக்கும் விரிவான ”பவர்பாயிண்ட் ஸ்லைடுகளையும்” பயிற்சி நெறிமுறைகளையும் தயாரித்து பாடங்களை அவரே வழி நடத்துகிறார்.
(ரு) மதிப்பீடு:
- படிநிலை 1 மாணவர்கள் அடுத்த படிநிலைக்கு முன்னேற வேண்டுமா அல்லது கூடுதல் பயிற்சி தேவையா என்பதை ஆண்டு இறுதி மதிப்பீடுகள் தீர்மானிக்கும். இதேபோல், படிநிலை 2 மாணவர்கள் 4-6 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் படிநிலை 3 க்குத் தகுதி பெறுகிறார்களா, படிநிலை 2 இல் தக்கவைக்கப் படுகிறார்களா அல்லது மேலும் பயிற்சிக்காக படிநிலை 1 க்குத் திரும்புகிறார்களா என்பதைத் தீர்மானிக்க மதிப்பீடு செய்யப்படுவார்கள்.
கூடுதல் குறிப்பு:
- இந்தப் பயிற்சித் திட்டம் “அக்ரோஸ்டிக்” (Acrostic) மற்றும் நினைவூட்டல்(Mnemonic) நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் மனப்பாடம் செய்யும் செயல்முறை மாணவர்களின் தமிழ் மொழி உச்சரிப்பை கணிசமாக மேம்படுத்துவதோடு மொழியாளுகையும் சிறப்பாக மேம்பட வகை செய்கிறது.
(B) இடைநிலை இந்து அறநெறிகல்வித் திட்டம் (IHBC)
பயிற்சி அமைப்பு:
- (ஆண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர நேரில் பயிற்சி வழங்கும் முகாம்கள்)
பாடத்திட்டம்:
- இந்து சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், அன்றாட வாழ்க்கைக்கான நெறிமுறைகள் மற்றும் அறநெறிகளை மையமாகக் கொண்ட 48 தலைப்புகளை உள்ளடக்கியது. யோகா பயிற்சி மற்றும் பாரம்பரிய இந்திய விளையாட்டுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
காலம்:
- வடிவம் 1: ஆண்டுக்கொரு முறை 3 நாட்கள் / 2 இரவுகள் முகாமாக நான்கு (4) ஆண்டுகளுக்கான திட்டம் / ஒவ்வொரு முகாமிலும் 12 தலைப்புகளில் பாடங்கள் நடத்தப்படும். (மொத்தம் 12 நாட்கள்)
- வடிவம் 2: ஒரு காலாண்டுக்கு 6 தலைப்புகளை உள்ளடக்கிய ஒரு நாள் முகாமாக இரண்டு (2) ஆண்டுகள் நடத்தப்படும் (மொத்தம் 8 நாட்கள்)
- வடிவம் 3: மாதந்தோறும் நான்கு (4) தலைப்புகளைக் கொண்ட ஒரு நாள் வகுப்பாக ஒரு வருடத்தில் முடியும் திட்டம். (மொத்தம் 12 நாட்கள்)
குறிப்பு:
- நிதிப் பற்றாக்குறை காரணமாக இத்திட்டம் தற்போது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
(C) போதனாசிரியர் பயிற்சி
பயிற்சி முறை:
- பயிற்சியில் புதிதாக இணைக்கப்படும் போதனாசிரியர்கள் BHBC படிநிலை–1 மெய்நிகர் வகுப்பறைகளில் இணைந்து சுமார் ஓராண்டு காலம் பயிற்சி பெறுவார்கள். தேசிய கௌ.செயலாளர் அம்மா திலகவதி செங்கோடன் மற்றும் நிறுவனர் தலைவர் ஐயா இராமையா சுப்பிரமணியம் அவர்களின் மேற்பார்வையில் பயிற்சிகள் நடைபெறும். சுமார் ஒரு வருட தீவிர பயிற்சிக்குப் பிறகு, இவர்கள் மெய்நிகர் வகுப்பறைகளுக்கு நிர்வாக போதனாசிரியர்களாகவோ அல்லது உதவி போதனாசிரியர்களாகவோ நியமிக்கப்படலாம்.
- ஆண்டுக்கு இருமுறை மண்டலவாரியாக (வடக்கு, மத்திய மற்றும் தெற்கு) போதனாசிரியர் பயிற்சி நிறுவனர் தலைவர் ஐயா இராமையா சுப்பிரமணியம் அவர்கள் முதன்மை பயிற்சியாளராக, தேசிய கௌ. செயலாளர் அம்மா திலகவதி செங்கோடன் அவர்கள் உதவியுடன் நடத்தப்படுகிறது.
- ஆண்டுக்கொரு முறை பொருத்தமான கடலோர ஓய்வு விடுதி தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து போதனாசிரியர்களுக்கும் 3 பகல் / 2 இரவுகள் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நடத்தப்படுகிறது. மொத்த செலவுகளில் மையம் ஐம்பது சதவீதத்தை (50%) ஏற்றுக்கொள்கிறது.
குறிப்பு:
- நிதிப் பற்றாக்குறையால் மண்டலவாரியான பயிற்சிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.